TIN சான்றிதழ் விவகாரத்தில் அதிரடி அறிவிப்பு! மக்களுக்கு மேலும் 5 மாத கால அவகாசம்!
J
JV Admin
1 நிமிட வாசிப்பு
1 பார்வைகள்
TIN (வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்) சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலைத் தொடர்ந்து, எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த இந்தக் கட்டாய விதி, தற்போது 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகளவிலான விண்ணப்பங்கள் மற்றும் மக்கள் நெரிசலைக் கருத்திற்கொண்டு நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சான்றிதழ்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று நடைமுறைகளையும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் இணையவழி e-Services ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு: TIN பெறுவதற்கான நடைமுறை ரத்து செய்யப்படவில்லை; குறிப்பிட்ட எட்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டாயச் சமர்ப்பிப்பு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (0)
முதல் கருத்தை இடுங்கள்.